வடவள்ளியில் சிறுமியிடம் தவறான நடத்தை – போலீஸ் அதிரடி நடவடிக்கை

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 9 வயது சிறுமியிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த 52 வயது நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, ஆர்.எஸ்.புரம் மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கஸ்தூரி நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த காசிநாதன் (52) என்பவர் சிறுமியிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காசிநாதனை நேற்று கைது செய்தனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் ஒரே நேரத்தில் ஆடு மாடுகளுக்கு நேர்ந்த சோகம்…

கோவை: ஒரே தொட்டியில் தண்ணிர் பருகிய ஆடு மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் ஒரே தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பருகிய...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...