கோவை: பெண்களின் பாதுகாப்பு தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவையில் தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அனைத்தின் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து பேசிய மாதர் சங்கத்தினர் இந்த விவகாரத்தில் மூன்று பேர் உடனடியாக கைது செய்யப்பட்டாலும் பெண்கள் பாதுகாப்பு தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் இது போன்று சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் சிறையில் இருந்து வெளிவராத வண்ணம் வழக்குகளை பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.


