தான் ஜெயலலிதாவை எதிர்க்க முக்கிய காரணம் ஆர்.எம்.வீரப்பனின் பதவி பறிப்பு தான் என்று முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நினைவு நாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது:
பாட்ஷா 100 நாள் விழாவில் அப்போதைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் முன்னிலையில், நான் பேசினேன். அப்போது வெடிகுண்டு கலாச்சாரம் குறித்தும் பேசினேன்.
நான் அப்படிப் பேசியிருக்கக்கூடாது. அப்போது அந்தளவுக்கு எனக்குத் தெளிவு இல்லை. மேடையில் அமைச்சர் முன்னிலையில் பேசியதால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவரது பதவியைப் பறித்துவிட்டார்.
எனக்கு அப்போது தெளிவு இல்லை. நான் பேசியதால் தான் அவர் பதவி போனது என்ற நினைப்பால் எனக்குத் தூக்கம் போனது. அந்த தழும்பு என்னை விட்டு மறையவில்லை.
நான் ஜெயலலிதாவை எதிர்க்கப் பல காரணங்கள் இருந்தாலும் இது தான் முக்கிய காரணம்.
உள்ளிட்ட விஷயங்களை ரஜினி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.