Chennai Weather: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பில், சென்னையில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
ஜூன் 19ம் தேதி வியாழன் அன்று வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான/மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Advertisement

அதேபோல் ஜூன் 20ம் தேதி வானம் மேகமூட்டத்துடன் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சம் 38°C – 39°C மற்றும் குறைந்தபட்சம் 28°C ஆக இருக்கலாம்.
ஜூன் 21, 22 ஆகிய தேதிகளில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை குறைந்தது 26°C – 27°C மற்றும் அதிகபட்சம் 36°C – 38°C ஆக பதிவாக வாய்ப்புள்ளது.
ஜூன் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு குறைவு.
ஜூன் 25ம் தேதி லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் சென்னையில் ஜூன் 19, 20, 21, 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.