Coimbatore weather: அடுத்த 7 நாட்களில் 3 நாட்கள் மழை!

Coimbatore weather: கோவையில் அடுத்து வரும் 7 நாட்களில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் 25ம் தேதி வரை கோவைக்கான வானிலை முன்னறிவிப்பு பின்வருமாறு:

ஜூன் 19 மற்றும் 20 தேதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படும். இதில் 19ம் தேதி மட்டும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலை குறைந்தது 23°C முதல் அதிகபட்சம் 32°C வரை பதிவாகலாம்.

ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த நாட்களில் வெப்ப நிலை குறைந்தது 23°C முதல் அதிகபட்சம் 31°C வரை பதிவாகலாம்.

Advertisement

ஜூன் 23, 24 மற்றும் 25 ஆகிய தினங்களில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும். மழைக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது.

இந்த நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 23°C முதல் அதிகபட்ச வெப்பநிலை 31°C முதல் 32°C வரை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இவ்வாறு சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது அன்றாட வேலைத் திட்டங்களை திட்டமிடலாம்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

குறுக்கே வந்த பாம்பு- அலறி அடித்து ஓடிய சிறுவன்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: சைக்கிளில் சென்ற போது திடீரென குறுக்கே வந்த பாம்பின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சைக்கிள் ஓட்டி செல்லும் போது திடீரென குறுக்கே வந்த பாம்பைக் கண்டு அலறி அடித்து தாவி குதித்து...