கோவை: கோவையில் இந்த வார வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கோவையில் கோவை வெப்பம் கொளுத்தி வந்த நிலையில், இந்த வாரம் பெய்த மழையால் சற்று வெப்பம் தணிந்தது. ஆனால், இன்று மீண்டும் வெப்பம் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், இன்று முதல் 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:
கோவையில் இன்றும் (மார்ச்15), நாளையும் குறைந்தது 22 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.
மார்ச் 17, 18 ஆகிய தேதிகளில் மேலும் அதிகரித்து அதிகபட்சம் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குட் நியூஸ்
மார்ச் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை கோவையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இந்த நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 19, 20, 21 ஆகிய தேதிகளில் வெப்பம் அதிகபட்சம் 35 டிகிரி வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்கள் இந்த வானிலை முன்னறிவிப்புக்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம்.