Header Top Ad
Header Top Ad

அந்த 7 நாட்கள்: ரதியே ரதியே… மனதை கொள்ளை கொள்ளும் First Single – VIDEO

அந்த 7 நாட்கள் படத்தின் First Single பாடலான ரதியே ரதியே வெளியாகி பலரது மனதையும் கொள்ளை கொண்டு வருகிறது.

அந்த 7 நாட்கள் திரைப்படம் வரும் 12ம் தேதி வெளியாக உள்ளது. எம். சுந்தர் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தை முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ளார். பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடும் இந்த படம் ரொமான்டிக் திரில்லர் மற்றும் காதல் சஸ்பென்ஸ் திரைப்படமாக வருகிறது.

அஜிதேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார்.

இதனிடையே படத்தின் முதல் பாடலான ரதியே ரதியே பாடல் வெளியாகியுள்ளது. மோகன்ராஜா இந்த பாடலை எழுதியுள்ளார். இசைக்கு மெருகேற்றும் தனது இனிமையான குரலில் இந்த பாடலை பாடியுள்ளார் ஹரிச்சரண்.

அவரின் குரல் இந்த ரொமான்டிக் மெலடிக்கு உயிர் கொடுக்கிறது. இப்பாடல் ஏற்கனவே யூடியூபில் 1.39 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

ரதியே ரதியே பாடல் காட்சிகளில் அஜிதேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதாவின் கெமிஸ்ட்ரி அழகாக காண்பிக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் கோபிநாத் துரை இதனை நேர்த்தியாகக் கையாண்டுள்ளார். எடிட்டிங் மற்றும் VFX பணிகளை முத்துமிலன் ராமு செய்துள்ளார். இதனால் பாடல் பார்வையாளர்களுக்கு கண்ணுக்கு கவர்ச்சியாக தெரிகிறது.

Advertisement

அந்த 7 நாட்கள் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் நமது தளத்தில் வெளியிடப்படும்.

ரதியே ரதியே பாடலை இங்கே காணலாம்:-

Recent News