Header Top Ad
Header Top Ad

கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது- காரணம் என்ன?

கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகராட்சி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற 40 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

கோவை மாநகராட்சி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவிக்கப்பட்டிருந்தது.

அறிவிப்பை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஊதியமாக 770 வழங்க வேண்டும்,
துப்புரவு பணிக்காக சேர்ந்த மாற்று சமூகத்தை சார்ந்தவர்களுக்கு சாதிய அடிப்படையில் பணி வழங்கும் முறையை உடனடியாக கைவிட வேண்டும்,

மரணமடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமானது நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில் கோனியம்மன் கோவிலில் இருந்து மாநகராட்சி அலுவலகம் நோக்கி வந்த 40க்கும் மேற்பட்டவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Advertisement

Advertisement

Recent News