தினமும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் பலரும் படாதபாடு படுகிறார்கள். குறிப்பாக தனியாக சிக்கும் தாய்மார்கள் ஆகும் டென்ஷனுக்கு அளவே இல்லை.
6 முதல் 10 வயது குழந்தைகளை கையாள்வது மிகவும் சிரமம். “இன்னும் சிறிது நேரம் தூங்குறேன்” என்று மழலைகள் கேட்க, பெற்றோர்கள் செய்வதறியாது நிற்கும் நிலை பல வீடுகளில் காணமுடிகிறது.
இந்த காலை நேர டென்ஷனைத் தவிர்க்க சில எளிய வழிகள் இதோ…
முன்கூட்டியே திட்டமிடல்:
குழந்தை பள்ளிக்குச் செல்லும் அடுத்த நாள் காலை எதையும் அலட்டாமல் செய்ய, முந்தய நாளே திட்டமிடல் அவசியம். யூனிஃபார்ம், காலணிகள், பைகள், ஹோம் வொர்க் ஆகியவை அனைத்தும் முந்தின இரவே தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். இது காலை நேர அழுத்தத்தை குறைக்கும்.

ஆரோக்கியமான தூக்கம்:
குழந்தைக்கு போதுமான உறக்கம் கிடைக்காவிட்டால், காலை எழுந்திருப்பது மிகவும் கடினமாகிவிடும். 7 முதல் 10 வயது குழந்தைகள் தினமும் குறைந்தது 9 முதல் 11 மணி நேரம் தூங்க வேண்டும் என்பதே நிபுணர்கள் அழுத்தமாகச் சொல்வது. எனவே, இந்த விஷயத்தில் Compromise செய்யாமல், பெற்றோர் குழந்தையை இரவு 9 மணிக்குள் படுக்கச் செய்ய வேண்டும்.
காலை பழக்கவழக்கம்:
குழந்தைக்கு காலை எழுந்ததும் பற்களைத் துலக்குவது, முகம் கழுவுவது, சிறிய உடற்பயிற்சிகள் பயிற்சிகள் செய்வது போன்ற பழக்கங்களை சீராக வளர்க்க வேண்டும். இது உடல் புத்துணர்ச்சி தருவதுடன் பள்ளிக்குச் செல்லும் ஆர்வத்தையும் அதிகரிக்கும்.
உணவில் கவனம்:

உணவை சுவையாகவும் வண்ணமயமாகவும் வழங்கினால், குழந்தை விருப்பத்துடன் சாப்பிட்டு சீக்கிரம் தயாராகும்.
காலை நேரத்தில் ஆரோக்கியமான, லேசான மற்றும் குழந்தைக்கு பிடித்த உணவை வழங்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இட்லி, தோசை, பால், பழம் அல்லது பாஸ்தா போன்றவை குழந்தையின் மனநிலையை உற்சாகமாக வைத்திருக்கும்.
உற்சாகம் அளித்தல்:
குழந்தையை பள்ளிக்குச் செல்லும்போது “இன்று உனக்கு ஒரு புதிய பாடம் இருக்கிறது”, “உன் நண்பர்களை சந்திக்கப் போகிறாய்”, “உன் வரைபடம் ஆசிரியருக்கு காட்டப் போகிறாய்” என்று உற்சாகமூட்டும் வார்த்தைகள் கூறுவது பயனுள்ளதாக இருக்கும்.
கண்டிப்பாக கூடாது:
காலை நேரத்தில் மொபைல், டிவி, டேப்லெட் போன்ற Digital Distraction குழந்தைக்கு காட்டக்கூடாது. ஏற்கனவே இந்த பழக்கத்தில் முழ்கிப்போன குழந்தைகள் இரண்டு நாட்கள் அழுவார்கள். அதற்காக மொபைலை கொடுக்காதீர்கள்.
இது அவர்களை சிதறடிக்கும். அதற்கு பதிலாக சுறுசுறுப்பான, மோட்டிவேஷன் பாடல்களை ஒலிபரப்புங்கள். வீடியோ வடிவில் எதையும் காண்பிக்க வேண்டாம்.
முன்மாதிரியாக இருப்பது:
குழந்தை பெற்றோரின் பழக்கங்களைப் பின்பற்றுவார்கள். எனவே, பெற்றோர் காலை நேரத்தில் சுறுசுறுப்பாகவும் நேர்த்தியாகவும் நடந்துகொண்டால், குழந்தையும் அதையே பின்பற்றுவார்.

காலை பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை சீக்கிரம் தயாராக வைப்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலாக இருந்தாலும், சிறிய திட்டமிடலும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் இருந்தால் இது மிகவும் எளிதாகும்.
கோவை செய்திகள், அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
இது அவர்களின் வாழ்க்கையை நேர்த்தியாக்கும். உங்கள் டென்ஷனையும் குறைக்கும். நிச்சயமாக இந்த ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள். ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தை கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
தினமும் காலையில் குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் பெற்றோர் மற்றும் பள்ளி குழுக்களில் இச்செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இன்றைய (செப்., 4) மின்தடை