கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேயர் தலைமையில் நடைபெறும் மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் பிரதி வாரமும் நடைபெற்று வருகிறது. இதனிடையே நாளை குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
நாளை (15.04.2025) மேயர் தலைமையில்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், காலை 11 மணி அளவில், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.