கோவை: சரவணம்பட்டி பகுதியில் ஐ.டி நிறுவனங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வருவதாக அப்பகுதியினர் புலம்பல்.
கோவை சரவணம்பட்டி சுற்றுவட்டாரம் ஐ.டி நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உருவெடுத்துள்ளது. கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்து இளைஞர்கள் இங்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
ஏராளமான நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ள பகுதி இது என்பதால் சரவணம்பட்டி சுற்றுவட்டாரத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இரவு நேரத்தில் செப்பனிடப்படாத சாலையில், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
சரவணம்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள முக்கிய சாலைகளை விரிவுபடுத்தி, தரம் உயர்த்தி அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஐ.டி ஊழியர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.