கோவை: கோவையில் சாலையோர உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சாலையோர உணவு வணிகர்களுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமை வகித்தார். உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா முன்னிலை வகித்தார்.
இதில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் பதிவுச் சான்று விண்ணப்பித்துக் கொடுக்கப்பட்டது.

மேலும், அடிப்படை உணவு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு, உணவு வணிகர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவ சான்று வழங்கப்பட்டது.
மேலும், உணவு வணிகர்கள் மத்தியில், தரமான மூலப் பொருட்களை வாங்கி சமைத்தல், பூச்சிகள், எலிகள் இல்லாதவாறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல், சுத்தமான குடிநீரைப் பயன்படுத்துதல், செய்தித்தாள்களைப் பயன்படுத்தி உணவுகளை மடிப்பதால் ஏற்படும் விளைவுகள் உள்ளிட்டவை எடுத்துரைக்கப்பட்டன.
இந்த முகாமில் உணவு வணிகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்