தேர்தல் செயலிகள் குறித்து கோவையில் பயிற்சி வகுப்பு…

கோவை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் தேர்தல் செயலிகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால், தேர்தல் செயலிகளின் பயன்பாடு மற்றும் மேலாண்மை குறித்த (காணொளி வழி) பயிற்சி வகுப்பு தகவல் தொழில் நுட்பத்தின் திட்ட முன்னோடி சௌரப் ராய் அவர்களால் நடத்தப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று மாலை தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் செயலிகளின் பயன்பாடு மற்றும் மேலாண்மை குறித்த (காணொளி வழி) பயிற்சி வகுப்பு தகவல் தொழில் நுட்பத்தின் திட்ட முன்னோடி சௌரப் ராய் அவர்களால் நடத்தப்பட்டது.

இப்பயிற்சி வகுப்பில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் , மாவட்ட துணை தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர், நாராயணன், கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (RO), கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து உதவி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ARO), அனைத்து மாநில நிலை முதன்மை பயிற்சி வழங்குநர்கள் (SLMT), அனைத்து மாவட்டநிலை முதன்மை பயிற்சி வழங்குநர்கள் (DLMT), அனைத்து சட்டமன்ற தொகுதி நிலை முதன்மை பயிற்சி வழங்குநர்கள் (ALMT), தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடக கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட நிரலாளர் மற்றும் அனைத்து சட்டமன்ற தொகுதி உதவி நிரலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சியில், முப்படை பிரிவு வாக்காளர்களுக்கு (Service Voters) அஞ்சல் வாக்குச்சீட்டுகளை அனுப்பி வைப்பு குறித்த நடை முறைகள், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக சி-விஜில் (C-Vigil) செயலி மூலமாக பொதுமக்களால் புகார் அளிக்கப்படும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய செயல் முறைகள், தேர்தல் காலத்தின் போது பறிமுதல் செய்யப்படும் பணம்,

பரிசுப்பொருட்கள் உள்ளிட்ட ESMS (Election Seizure Management System) செயலியில் பதிவேற்றம் செய்வது மற்றும் சுவிதா (Suvidha) தளம் மூலமாக வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வது, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள்
மற்றும் பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறை குறித்தும் விளக்கப்பட்டது.

மேலும்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு அச்சுப்பதிவு கருவியினை (VVPAT) கையாளுதல் மற்றும் வாக்குப்பதிவு நடைமுறைகள் தொடர்பாகவும் பயிற்சி வழங்கப்பட்டது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.