பிரபல நிறுவனத்தின் பேரில் போலி பசை- கோவையில் இயங்கி வந்த தொழிற்சாலைக்கு சீல்…

கோவை: கோவையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் ரசாயன பசை தயாரித்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

Advertisement

கோவையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் ரசாயன பசை தயாரித்த தொழிற்சாலைகக்கு அறிவுசாரா சொத்துரிமை பாதுகாப்பு குழுவினர் சீல் வைத்துள்ளனர்.

பி.வி.சி குழாய் உள்ளிட்ட பொருட்களை ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ரசாயன பசையை பிரபல நிறுவனம் ஒன்று தயாரித்து வருகிறது. அந்த நிறுவனத்தின் பெயரில் போலியாக ரசாயன பசை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக அறிவுசாரா சொத்துரிமை பாதுகாப்பு குழுவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வணிக புகார்களை விசாரிக்கும் டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அக்குழுவினர் கோவை பீளமேடு ஸ்ரீராம் நகரில் தேஜா ராம் என்பவர் நடத்தி வந்த அந்த தொழிற்சாலையில் சோதனை நடத்தினர்.

Advertisement

இதில் பிரபல நிறுவனப் பெயரை பயன்படுத்தி போலியாக ரசாயன பசை உள்ளிட்ட பொருள்கள் தயாரிப்பது தெரிய வந்தது. உடனடியாக அங்கு ஏராளமான அட்டைப் பெட்டிகளில் இருந்த ரசாயன பசை கைப்பற்றப்பட்டது. மேலும் போலி முத்திரைகள் உள்ளிட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் அந்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒரு நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி பசை பொருட்களை தயாரித்து, சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல், சந்தைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் தேஜா ராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...