உலமாக்களுக்கு நற்செய்தி- விரைந்து பயனடைய கோவை ஆட்சியர் அறிவுறுத்தல்…

கோவை: உலமாக்களுக்கான வாகன மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் குறித்தான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25,000/லிருந்து ரூ.50,000/-ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள்/ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இருசக்கர வாகனம் வாங்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கோயம்புத்தூர் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் இந்தி மொழி அழிப்பு- போலிசார் விசாரணை…

கோவை: சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் அறிவிப்பு பலகையில் இருந்த இந்தி மொழி கருப்பு மைக் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இந்தி மொழி திணிப்பிற்கு பல்வேறு திராவிட கட்சிகளும் இந்தி திணிப்பு எதிர்ப்பாளர்களும் கடும் கண்டனத்தை...

Video

கோவையில் காரை கரப்பான் பூச்சி போல் கவிழ்த்துவிட்டு மட்டை – வீடியோ

கோவை அருகே தாறுமாறாக வந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்த நிலையில், போதையில் இருந்த டிரைவர் அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.