கோவை: வரத்து குறைவு காரணமாக கோவையில் காய்கறிகள் விலை சற்றே அதிகரித்துள்ளது.
கோடை காலம் தொடங்கியது முதலே கோவைக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் வரத்து குறையத் தொடங்கியது. இதனிடையே கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவு காணப்படுகிறது.
வரத்து குறைந்துள்ள நிலையில், மழையில் நனைந்து காய்கறிகள் அழுகி வீணாகும் நிலையும் ஏற்பட்டுள்ளதாலும், கோவையில் காய்கறிகள் விலை சற்றே அதிகரித்துள்ளது.

உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.60, தக்காளி ரூ.20, இஞ்சி ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.24, சின்ன வெங்காயம் ரூ.40, முருங்கைக்காய் ரூ.80, புதினா ரூ.30, மல்லி ரூ.100, கருவேப்பிலை ரூ.40, முட்டைகோஸ் ரூ.20, கேரட் ரூ.50, பீட்ரூட் ரூ.70, பச்சை மிளகாய்.50 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.