கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளதை முன்னிட்டு வாகனங்களில் மேலே செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளதை முன்னிட்டு வாகனங்களில் மேலே செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்தான செய்தி குறிப்பில், மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் எதிர்வரும் 27.10.2025 மற்றும் 28.10.2025 ஆகிய தேதிகளில் கந்தர் சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நடைபெற உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அந்த இரு நாட்களில் மலைக்கோயிலுக்கு இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் (துணை ஆணையர் / செயல் அலுவலர்)செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.




