கோவை: த.வெ.க., தலைவர் விஜய் கோவை வந்த நிலையில் அவரின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.
த.வெ.க.,வின் முதல் பூத் கமிட்டி கூட்டம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் விஜய் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
கோவை வந்த அவருக்கு த.வெ.க.,வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிரசார வாகனத்தில் ஏறிய விஜய் மீது த.வெ.க., கட்சித் துண்டுகளைத் தொண்டர்கள் வீசினர். அதனை எடுத்து அணிந்து கொண்ட விஜய், விமான நிலையத்தில் இருந்து பிரசார வாகனம் மூலமாக தொண்டர்களைச் சந்தித்தபடி சென்றார்.
வழியில் தொனர் ஒருவர் கொடுத்த கண்ணாடியையும் அணிந்து கொண்டு சென்றார். அவரது பிரசார வாகனத்தை நூற்றுக்கணக்கான வாகனங்கள் சூழ்ந்தபடி சென்றன.

தொடர்ந்து தனியார் கல்லூரிக்கு சென்ற அவர், அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.