கீரணத்தம் வந்த காட்டு யானைகள்; ஆனந்தக் குளியல் போடும் வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் குட்டையில் உற்சாக குளியலாடிய காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல் போடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Advertisement

சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் இருந்து வெளியே வந்த யானைகள் வழி தவறி நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை கீரணத்தம் ஐடி பார்க் பகுதியில் மூன்று யானைகள் சுற்றித்திரிந்ததை அப்பகுதி மக்கள் கவனித்தனர்.

தொடர்ந்து அங்கிருந்த குட்டையில் இறங்கி யானைகள் நீரில் விளையாடி உற்சாக குளியல் போட்டன. இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

யானைகள் குளியல் போட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Recent News

கோவையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிப்பார்க்கும் பணிகள் துவங்கியது…

கோவை: அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் முன்னிலையில் வாக்கு பதிவு எந்திரங்கள் சரி பார்க்கப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு தேவையான அனைத்து பணிகளையும் தேர்தல்...

Video

Join WhatsApp