கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து திருடிய இளம் பெண்!

கோவை: வாடிக்கையாளர் போல வந்து அழகு நிலையத்தில் தங்க, வைரம் மோதிரம் திருடிய இளம் பெண்ணை கோவையில் போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (45). இவர் பங்கஜ மில் ரோட்டில் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று இவரது அழகு நிலையத்திற்கு 2 பெண்கள் வந்துள்ளார். அவர்களில் ஒருவர், ஜெயலட்சுமியிடம் பேஷியல் செய்ய வேண்டும் என்றும், மற்றொருவர் கண் புருவம் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

இதையடுத்து ஜெயலட்சுமி தனது விரலில் அணிந்திருந்த 4 தங்க மோதிரங்களை கழற்றி டேபிள் டிராயரில் வைத்தார். பின்னர் ஒரு பெண்ணுக்கு பேஷியல் செய்து கை கழுவ சென்றார். இதை தொடர்ந்து மற்றொறு பெண்ணுக்கு கண் புருவதை எடுத்துக் கொடுத்தார்.

இதையடுத்து அவர்கள் இருவரும் பணத்தை கொடுத்து விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து ஜெயலட்சுமி டிராயரில் வைத்திருந்த மோதிரத்தை எடுக்க அதனை திறந்தார். அப்போது தங்கம், வைரம், வெள்ளி ஆகிய 3 மோதிரங்கள் காணாமல் போயிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், ஜெயலட்சுமிக்கு பேஷியல் செய்யும் போது கண் புருவம் எடுக்க வந்த மற்றொரு பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து ஜெயலட்சுமி ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் நகைகளைத் திருடியது ராமநாதபுரம் திருவள்ளூவர் நகரை சேர்ந்த திவ்யா (28) என்பதும், ஜெயலட்சுமி பேஷியல் செய்யும் போது அசந்த நேரம் பார்த்து நகைகளை திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திவ்யாவை கைது செய்து, அவர் திருடிய நகைகளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent News

Video

Join WhatsApp