கோவை: ரிதன்யா தற்கொலைக்கு விசாரணை தோய்வு அடைந்து விட்டதாகவும் வழக்கை வேறு அதிகாரி அல்லது சிபிஐ தயாரிக்க வேண்டும் என்று ரிதன்யாவின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்…
தமிழகத்தை உலுக்கிய திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த ரிதஞா திருமணமாகி 78-வது நாளில் வரதட்சனை கொடுமையால் ஆடியோ வெளியீட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த தற்கொலையில் சரிவர வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை,வழக்கறிஞர் மற்றும் அவரது உறவினர் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்திற்கு புகார் கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை,
ரிதன்யா தற்கொலைக்கு விசாரணை தொய்வு அடைந்து விட்டதாகவும் இதுகுறித்து மேற்கு மண்டல ஐஜி இடம் நேரடியாக புகார் அளித்ததாகவும் வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
மேலும் பிரேத பரிசோதனை ரிப்போர்ட், லேப் ரிப்போர்ட்,ஆடியோ ரிப்போர்ட் உள்ளிட்டவை வந்த பிறகு அதற்குரிய விசாரணை நடத்தப்படும் என்று ஐஜி தெரிவித்ததாக அண்ணாதுரை கூறினார்.
ஜூன் 29-ம் தேதி ரிதன்யா ஆடியோ வெளியீட்டு தற்கொலை செய்து கொண்டார் அதன் பிறகு இருவரை மட்டும் டிஎஸ்பி கைது செய்து உள்ளார் பின்னர் ஒருவரை கைது செய்து தனது சொந்த ஜாமினில் விடுவித்துள்ளார். இதில் ஏதோ மர்மம் இருப்பதாகவும் இந்த வழக்கை வேறு அதிகாரி அல்லது சிபிஐக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.அதேபோல ரிதன்யாவிற்கு கொடுத்த நகை,பணம் உள்ளிட்ட சீர்வரிசை உள்ளிட்டவௌ நீதிமன்றம் மூலமாக வழங்குவதாக காவல்துறையினர் தெரிவித்ததாக கூறினார்.
தொடர்ந்து பேசிய ரிதன்யாவின் வழக்கறிஞர் குப்புராஜ், தற்போது விதிணை வழக்கில் 108,85 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அந்த விரைவில் குற்றவாளிகளுக்கு எளிதாக பெயில் கிடைத்துவிடும் என்று கூறினார். ஆனால் Women Harassment and Sexual Harassment 75,76,78,80 பிரிவின் கீழ் இதில் வழக்கு பதிவு செய்யவில்லை இதன் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஐஜி இடம் தெரிவித்துக்காக கூறினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாதுரை, 27 ஆண்டுகளாக பெண்ணை பத்திரமாக பார்த்து உள்ளேன்.ஒரு சில டிஜிட்டல் மூடியாவில் தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.ரிதன்யா இறப்பை விட மிகவும் வேதனை அளிப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.உங்கள் வீட்டில் அக்கா,தங்கச்சிக்கு இதுபோல நடந்திருந்தால் சோசியல் மீடியாவில் பதிவு செய்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
அதுபோல சரியான தகவல்களை பதிவிடுமாறு கேட்டுக் கொண்டார்.இனி இதுபோல் எந்த பெண்ணிற்கும் நடக்கக்கூடாது என்றும் ரிதன்யாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சரியான தகவலை பகிர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.