Header Top Ad
Header Top Ad

நாடு முழுவதும் 10 லட்சம் மரங்கள்- கோவையில் குழந்தைகளின் உயர்ந்த எண்ணம்!!!

கோவை: மண்ணிலே கரங்கள் இந்தியாவோடு இதயங்கள் என மையப்படுத்தி நாடு முழுவதும் 10 லட்சம் மரங்களை நட குழந்தைகள் அமைப்பான சிஐஓ திட்டம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்-ன் குழந்தைகள் அமைப்பான சிஐஓ தேசிய அளவில் ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 25-ம் தேதி வரை மண்ணிலே கரங்கள் இந்தியாவோடு இதயங்கள் என்ற மையக் கருத்தில் சுற்றுச்சூழலை மையப்படுத்தி பிரசாரம் செய்கிறது.
குழந்தைகளால் நடத்தப்படும் இந்த அமைப்பின் செய்தியாளர்கள் சந்திப்பு கோவை பிரஸ்கிளப்பில் நடைபெற்றது.

Advertisement
Lazy Placeholder

அப்போது பேசிய கோவை மாவட்டத் தலைவர் நபீளா சுரம்:-

சிஐஓ என்பது 5 முதல் 12 வயது உள்ள குழந்தைகளை நல்வழிப்படுத்தும் ஓர் குழந்தைகள் அமைப்பு என்றும் வரலாறு, நல்லொழுக்க போதனைகள், திறமைகளை வளர்க்கும் போட்டிகள் என குழந்தைகளை நல்வழிப்படுத்துவதே இதன் நோக்கம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதை கருத்தில் கொண்டு குழந்தைகளை நாளைய தலைவர்களாக மாற்றுகிறது சிஐஓ.

Advertisement
Lazy Placeholder

இன்று முக்கியமான பிரசனையை குழந்தைகளான நாங்கள் கையில் எடுத்துள்ளோம் என்றும் எங்கள் தலைமுறைக்கு நிழலும்,தண்ணீரும் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உங்கள் முன்னால் அமர்ந்திருக்கிறோம்.சாலை பெரிதாக்குதல்,தொழிற்சாலை கட்டுதல்,கிராமங்களை நகரமாக ஆக்குதல் போன்ற காரணங்களுக்காக மரம் வெட்டப்படுதலை நாம் பார்க்கிறோம்.

மரம் மனித வாழ்விற்கு அடிப்படை மரங்களை வெட்டிக் கொண்டே போனால் இயற்கை சமநிலை முற்றிலும் மாறிவிடும் அதனால் தான் மரங்களை வளர்த்தல் என்பது அவசியமாகி விட்டது.

மரங்கள் நமக்கு ஆக்ஸிஜன் தருகின்றன இது மனிதனின் வாழ்வுக்கு முதன்மையானது மரங்கள் மழையை அதிகரிக்கின்றன மண் அரிப்பு மற்றும் வெப்பமண்டல மாற்றத்தை குறைக்கும். மரங்கள் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் வாழ்விடம் தருகின்றன.மேலும் மரங்கள் நமக்கு பழங்கள்,மருந்துகள் மற்றும் நிழலை அளிக்கின்றன.இன்றைய சூழ்நிலையில் காடுகள் நாசம்,மழை குறைபாடு,காலநிலை மாற்றம் போன்ற பிரச்னைகள் மனிதனால் வந்தவை. இதை சமாளிக்க ஒரே தீர்வு மரம் வளர்ப்பது.ஒரு மரம் வளர்த்தால் ஒரு உயிரை காப்பது போன்றது அதனால் தான் மண்ணிலே கரங்கள் இந்தியாவோடு இதயங்கள் எனும் இந்தப் பிரசாரத்தைக் கையில் எடுத்துள்ளது.

நாங்கள் 10 லட்சம் மரங்களை நட போகிறோம் அதன் முக்கியத்துவத்தை
எடுத்து கூறபோகிறோம் மரம் வளர்ப்பதின் அவசியத்தை வலியுறுத்தி இந்த மாதம் இறுதியில் பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளேம்.இந்தப் பேரணியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மட்டும் பங்கேற்க போவதாக தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Latest Articles