கோவை: பல்வேறு வண்ணங்களில் 300 வகையான தேநீரை 30 நிமிடங்களில் தயாரித்து கோவை கல்லூரி மாணவர்கள் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ராமகிருஷ்ணா கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் கேட்டரிங் துறையைச் சேர்ந்த 40 மாணவர்கள் இணைந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

கொய்யா, லெமன், வெண்ணிலா, ஆரஞ்சு, லோட்டஸ், ஆப்பிள், மேங்கோ, ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள் உள்ளிட்ட 300 வகையான தேநீரை 30 நிமிடங்களில் செய்து அசத்தினர்.

பல வண்ணங்களில், பல சுவைகளில் தயாரிக்கப்பட்ட இந்த தேநீர் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் ஆச்சரியத்துடன் இவற்றைப் பார்த்துச் சென்றனர்.
