Header Top Ad
Header Top Ad

கோவையில் போதைப் பொருட்களுக்கு எதிராக திரண்ட 5,000 மாணவர்கள்!

கோவை: கோவையில் கல்லூரி மாணவ மாணவியர் 5,000 பேர் ஒன்று கூடி போதை பொருள் விழிப்புண்ர்வு ஏற்படுத்தி உறுதிமொழி ஏற்றனர்…

கோவையில் போதை பொருளை தடுக்கும் விதமாகவும், போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதை இல்லாத சமூகம் வருங்கால தலைமுறையை உள்ளடக்கிய சமுதாயத்தை கட்டமைக்கவும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்டம், போதைப்பொருள் தடுப்புக்குழு, யங் இண்டியன்ஸ் இணைந்து மாநகர காவல்துறை முன்னிலையில் விழிப்புணர்வு ஏறபடுத்தினர்.

Advertisement

கல்லூரியின் மைதானத்தில் 5 ஆயிரம் மாணவ மாணவிகள் கல்லூரியின் மைதானத்தில் ஒன்றிணைந்து “No Drugs” போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்றனர் . போலியான மாய சந்தோசத்திற்காக போதைப்பொருள் பயன்படுத்துவோர், போதை பொருட்கள் பயன்பாட்டை கைவிட வேண்டும் என வலியுறுத்திய மாணவ மாணவியர், போதைப் பொருள் பயன்படுத்துவதனால் போதை பிரியர்கள் மட்டுமின்றி, அவர்கள் குடும்பம் மற்றும் சமூகமும் பெரும் சீரழிவை சந்திப்பதாக வேதனை தெரிவித்து இருக்கின்றனர்.

எனவே போதை பொருள் பயன்பாடு தடுக்கப்பட வேண்டும் எனவும் போதை இல்லாத சமூகம் கட்டமைக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

வீடியோ காட்சிகள்…

Advertisement

Recent News