குற்றவாளி தப்பியோட்டம்; தெரிந்தால் தகவல் சொல்லுங்க… கோவை போலீசார் வேண்டுகோள்!

கோவை: குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தப்பியோடிய நிலையில், அவர் குறித்த தகவல் தெரிந்தால் உதவ கோவை போலீசார் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 40). இவர் மீது மேற்கு வங்கத்தில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அம்மாநில போலீசார் இவரைத் தேடி வந்தனர்.

Advertisement

மேலும், பாலக்காடு வந்த மேற்கு வங்க போலீசார் ஆனந்தனை கைது செய்து, கடந்த 26ம் தேதி ரயில் மூலம் மேற்கு வங்கம் அழைத்துச் சென்றனர்.

27ம் தேதி அதிகாலை ரயில் கோவை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த போது, ஆனந்தன் ரயிலில் இருந்து குதித்து தப்பிச்சென்றுவிட்டார்.

அவரை போலீசார் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போத்தனூர் ரயில் காவல் நிலையத்தில் போலீசார் புகார் அளித்தனர்.

இதனிடையே தப்பிச்சென்ற நபர் குறித்து தகவல் தெரிந்தால், அல்லது எங்கேனும் பார்த்தால் 9498180937 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் அளிக்க போத்தனூர் ரயில்வே போலீசார் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

Recent News

கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் நடந்த கொள்ளை- ஆட்டோ ஓட்டுநர் கைது…

கோவை: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிறுப்பு வளாகத்தில் 13 வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு உதவிய குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம்...

Video

Join WhatsApp