கோவை: கோவை வியாபாரியிடம் 71 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் வியாபாரியிடம் லாபம் தருவதாக நம்ப வைத்து ஏமாற்றிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகர் கோவை புதூர் பகுதியில் வசிப்பவர் முருகேசன் (62). இவர் ஒரு வியாபாரி. இவரிடம், சஞ்சய் ரெட்டி, மற்றும் அவரின் மனைவியான லாவண்யா என்ற இருவர், தாங்கள் வெளிநாடுகளுக்கு மாணவர்களை அனுப்பி படிக்க வைக்கும் கன்சல்டன்சி வைத்து இருப்பதாகவும், சினிமா தயாரிப்பாளர்கள் என கூறி அறிமுகம் செய்து கொண்டு, தங்களின் வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி 71 லட்சம் வரை பணம் பெற்று உள்ளனர்.
ஆனால், அவர்கள் கூறிய படி எந்த லாபமும் கொடுக்காமல், மோசடி செய்தது தெரிய வந்து உள்ளது. இதனால் ஏமாந்த முருகேசன், குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் இருவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.