கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படிப்புகளுக்கான இறுதி கட்ட மாணவர் சேர்க்கை நாளை நடைபெற உள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) 2025-2026 கல்வியாண்டிற்கான இறுதி கட்ட இளங்கலை (UG) சேர்க்கை நாளை (ஆகஸ்ட் 12) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
கல்லூரியில் மொத்தம் 23 இளங்கலை படிப்புகள் (ஷிப்ட் 1 & 2) உள்ளன. முதல் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இடங்கள் 1,727 என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில், அரசு அறிவுறுத்தலின்படி தற்போது கூடுதலாக 20% இடங்கள் உயர்த்தப்பட்டன.
இதனால், மொத்தம் 1,961 இடங்கள் உள்ளன. இதில் 1,820 இடங்கள் ஏற்கனவே நிரம்பியுள்ளன. தற்போது 141 இடங்கள் மட்டுமே சில துறைகளில் காலியாக உள்ளன.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர். இணைய இங்கே சொடுக்கவும் 👈
பாரதியார் பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 14-ஐ யூ.ஜி., சேர்க்கைக்கான கடைசி நாளாக அறிவித்துள்ளதால், தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவர்கள் — விண்ணப்பித்திருந்தாலோ , இல்லையோ – அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நாளை (12.08.2025) காலை 9 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்கலாம் என கல்லூரி முதல்வர் எம்.ஆர். எழிலி தெரிவித்துள்ளார்.