கோவையில் மகிழ்ச்சியுடன் தலை தீபாவளியை கொண்டாடிய புதுமண தம்பதியினர்

கோவை: கோவையில் புதுமண தம்பதியினர் அவர்களது தலை தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

இன்றைய தினம் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து கோவில்களுக்கு சென்று வழிபட்டு, பட்டாசுகள் வெடித்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

மேலும் புதுமண தம்பதிகளும் அவர்களது தலை தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்த சரண் மைதிலி
புதுமண தம்பதியினர் அவர்களது தலை தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

அதிகாலை எழுந்து தயாராகி பெரியவர்களிடம் ஆசி பெற்று பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியுடன் தலை தீபாவளியை கொண்டாடினர். தொடர்ந்து உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளனர்..

Recent News

கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு தண்டனை தீர்ப்பு வழங்கியது கோவை நீதிமன்றம்…

கோவை: கஞ்சா கடத்தல் வழக்கு இரண்டு பேருக்கு ஐந்தாண்டு சிறை மற்றும் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கஞ்சா கடத்தல் வழக்கில் இரண்டு பேருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து...

Video

Join WhatsApp