கோவை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை திறக்கப்பட்டுள்ளது.
கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை திறக்கப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
நொய்யல் ஆற்றல் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கோவை ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை மற்றும் அதன் அணைகட்டு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை திறக்கபட்டுள்ளது.
வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் சிலர் ஆபத்தை உணராமல் மீன்பிடிப்பதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று மட்டுமென மக்கள் கூறுகின்றனர்.


