Coimbatore Gold Rate today | சரிந்த தங்கம் விலை!

Coimbatore Gold Rate: தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கோவையில் அக்டோபர் மாத தொடக்கத்தில் தங்கம் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.10,890க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 10ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.11,260ஆக இருந்தது. உச்சபட்ச விலையாக கடந்த 17ம் தேதி கிராம் ரூ.12,200க்கும், ஒரு பவுன் ரூ.97,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தங்கம் விலை சரிவைச் சந்தித்து வருகிறது. இன்றும் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவைச் சந்தித்துள்ளது.

கோவையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150ம், பவுனுக்கு ரூ.1,200ம் குறைந்துள்ளது. தற்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.11,300க்கும், ஒரு பவுன் ரூ.90,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

18 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.125ம், பவுனுக்கு ரூ.1,000ம் குறைந்துள்ளது. தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.9,450க்கும், ஒரு பவுன் ரூ.75,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.165க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,65,000க்கும் விற்பனையாகிறது.

Recent News

Video

Join WhatsApp