கோவையில் இருந்து மதுரை புறப்பட்டார் துணை குடியரசு தலைவர்

கோவை: கோவை மற்றும் திருப்பூரில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு துணை குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் மதுரை புறப்பட்டார்.

துணைக் குடியரசு தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று தனி விமான மூலம் கோவை வந்தடைந்தார்.

Advertisement

கோவையில் கொடிசியா அரங்கில் சிட்டிசன் ஃபோரம் அமைப்பின் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது அதில் கலந்து கொண்டார். பின்னர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பேரூர் ஆதீனம் மடாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மாலை திருப்பூர் சென்றார்.

இன்று திருப்பூரில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மதுரை செல்வதற்காக சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் வந்தடைந்து தனி விமானம் மூலம் மதுரை புறப்பட்டார்.

Advertisement

கோவை விமான நிலையத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

துணை குடியரசு தலைவர் காரிலேயே பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் வருகை புரிந்து மதுரை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News

நவம்பர் 1ம் தேதி முதல் வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்- இ- பாஸ் பதிவு செய்ய லிங்க் இதோ..

கோவை: நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறைக்கு வருகின்ற...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp