கோவை சீனியர்களே வீடு தேடி ரேஷன் வருகிறது!

கோவை: கோவை மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தில் வருகிற 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை வயது முதிர்ந்தவர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

இதேபோல், நவ 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தாயுமானவர் திட்டத்தில் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

அதன்படி தகுதி வாய்ந்த குடும்ப அட்டை தாரர்களுக்கு குடிமைபொருட்கள் விநியோகம் செய்யப்படும் நாள் மற்றும் விநியோகம் செய்யப்படும் பகுதி குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் விளம்பரம் செய்யப்படும்.

Advertisement

தகுதி வாய்ந்த குடும்ப அட்டை தாரர்கள் அனைவரும் இல்லத்திற்கே வரும் அத்தியாவசியப்பொருட்களை பெற்று பயனடையுமாறு இணைப்பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை உங்கள் சுற்றுவட்டத்தினரிடம் பகிர்ந்து உதவிடுங்கள் வாசர்களே.

Recent News

Video

கோவை அருகே கொட்டகையை உடைத்து உள்ளே நுழைந்த யானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த மாட்டு தீவனங்களை காட்டு யானை தின்று சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், பன்னிமடை,...
Join WhatsApp