SIR பணிகளை ஆளும் கட்சியினர் மேற்கொள்கிறார்கள்- எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை: SIR பணிகளை திமுகவினர் மேற்கொள்வதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த தீவிர பணியில் ஆளும் கட்சியினர் மூலம் BLA2 படிவம் பெறப்படுவதாகவும் ஆறு மணிக்கு மேலும் அதிகாரிகள் பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் பி வேலுமணி, அம்மன் அர்ஜுனன், பிஆர்ஜி அருண் குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, SIR கீழ் அதிகாரிகள் வீடுவீடாக சென்று மனு படிவங்களை கொடுத்து வருகின்றனர், அந்த மனுக்களை சம்பந்தபட்ட அதிகாரிகள் தான் மக்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

பல BLA ஏஜெண்ட்டுகள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களாக உள்ளார்கள், அவர்கள் அவர்களுக்கு சாதகமான மனுக்களை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை தூக்கி வீசி விடுவதாக தகவல் வெளியாகிறது
எனவே அதிகாரிகள் தான் படிவங்களை திரும்ப பெற வேண்டும் என்றார்.

Advertisement

மேலும் பல இடங்களில் கூலி வேலைகளுக்கு செல்வோர் வேலை முடிந்து 6 மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வருவார்கள் எனவே அதிகாரிகள் ஆறு மணிக்கு மேலும் வீடு வீடாகச் சென்று இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சில இடங்களில் அதிகாரிகளுடன் சென்று திமுகவினர் நோட்டீஸ் வழங்குகிறார்கள் என கூறிய அவர் நடுநிலைமையுடன் இந்த பணிகளை அதிகாரிகள் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். வாக்குகளை சேர்ப்பது நீக்குவது போன்ற பணிகளை திமுக எப்பொழுதும் மேற்கொள்வார்கள் என கூறிய அவர் இது போன்றவற்றை செய்யக்கூடாது என்பதற்காக தான் தேடுதல் ஆணையம் இதனை கொண்டு வந்துள்ளது என்றார்.

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் இது போன்ற ஒரு சம்பவம் கோவையில் நடந்திருக்கக் கூடாது, காவல்துறை இதில் கோட்டை விட்டுவிட்டது என்றார். ரோந்து பணிகளை காவல்துறை மேற்கொள்வதே இல்லை என்றார்.

இது போன்ற சம்பவத்திற்கு முக்கிய காரணம் எங்கு பார்த்தாலும் மது கடைகள் இருப்பதும் கஞ்சாவும் தான் என்று குறிப்பிட்டார். எடப்பாடியார் ஆட்சியில் கோவையில் ஆர் எஸ் புரம் போலீஸ் ஸ்டேஷன் நம்பர் ஒன் போலீஸ் ஸ்டேஷன் என விருதுகள் வாங்கினார்கள் என்றும் அம்மா(ஜெயலலிதா) ஆட்சியிலும் எடப்பாடியார் ஆட்சியிலும் காவல்துறை சிறப்பாக செயல்பட்டார்கள் ஆனால் தற்பொழுது காவல்துறையினர் கைகள் கட்டப்பட்டுள்ளது என்ற சூழல் தான் உள்ளது என விமர்சித்தார்.

காவல்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும், இனி இது போன்ற ஒரு தவறுகள் ஏற்படக்கூடாது என்றார். குற்றவாளிகளை விரைவில் பிடிக்க வேண்டும் ஆனால் அவர்கள் உண்மையான குற்றவாளிகளாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். காவல்துறை பொதுமக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறார்கள் எனவே யாருக்கும் அடிபணியாமல் நடுநிலைமையோடு மக்களுக்கு பாதுகாப்பாக இருந்து இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். மது கஞ்சா ஆகியவற்றை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் அப்பொழுதுதான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றார்.

கோவை மாவட்டத்திற்கு வெளிநாட்டவர்கள் எல்லாம் தொழில் செய்ய வருகிறார்கள் தொழிற்சாலைகளும் மருத்துவமனைகளும் அதிகமாக உள்ளது என கூறிய அவர், திமுக ஆட்சியில் எந்த திட்டங்களையும் கொடுக்கவில்லை என்றும் சட்டம் ஒழுங்கும் சரி இல்லாமல் இருக்கிறது என்றார்.

Recent News

கோவையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்- சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேரிடம் நீதிபதி விசாரணை- நீதிமன்ற காவல் உத்தரவு

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு 19ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை...

Video

தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை- அலறி அடித்து ஓடிய மக்கள்- சிசிடிவி காட்சிகள்

கோவை: கோவை தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானையை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம்,...
Join WhatsApp