கோவையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்- சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேரிடம் நீதிபதி விசாரணை- நீதிமன்ற காவல் உத்தரவு

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு 19ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேருக்கு 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விமான நிலையம் பின்புறம் உள்ள காலி இடத்தில் தனியார் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி அவரது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மூன்று பேர் அவர்களை தாக்கி அந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் குணா என்கிற தவசி, சதீஷ் என்கிற கருப்பசாமி, கார்த்திக் என்கிற காளீஸ்வரன் ஆகிய மூன்று பேரை திங்கட்கிழமை இரவு காவல்துறையினரால் சுட்டுப் பிடித்தனர். அதனை தொடர்ந்து இந்த மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இன்று காலை கோவை அரசு மருத்துவமனையில் கோவை வடக்கு கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் விசாரணை நடத்திச் சென்றார்.

அதனைத் தொடர்ந்து கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி JM2 அப்துல் ரகுமான் இரவு எட்டு மணி அளவில் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டார். சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

Advertisement

நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை சந்தித்து விட்டு புறப்பட்டார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுக- வார்டு மக்களுடன் கோவை கவுன்சிலர் தர்ணா…

கோவை: தன்னை சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும் என்று வார்டு மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி... தன்னை களங்கப்படுத்தியதாக கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.