டாஸ்மாக்கை மூடுவது மட்டும் தீர்வல்ல- கோவையில் CITU மாநில தலைவர் பேட்டி

கோவை: சிஐடியு 16-வது மாநில மாநாடு கோவையில் எழுச்சியுடன் தொடங்கியது.

கோவை நவ இந்தியா சாலையில் உள்ள எஸ்.என்.ஆர் அரங்கில் சிஐடியு 16-வது மாநில மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது. நவம்பர் 9-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் செங்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, மாநாட்டு ஸ்தூபிக்கு மலர் தூவி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தொழிலாளர்கள் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவு ஜோதி மாநாட்டு வளாகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முதல்நாள் நிகழ்வில், அகில இந்திய துணைத் தலைவர் சி. பத்மநாபன் அனைவரையும் வரவேற்றார். மாநிலத் தலைவர் அ. சௌந்தரராஜன் தலைமை உரையாற்றினார். அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென் தொடக்க உரை நிகழ்த்தினார்.

தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் அகில இந்தியத் தலைவர் கி. நடராஜன், தமிழ்நாடு ஏடியூசி மாநில பொதுச் செயலாளர் ம. இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எச்.எம்.எஸ் மாநில செயலாளர் டி.எஸ். ராஜாமணி, ஐ.என்.டி.யு.சி பொதுச் செயலாளர் வி.ஆர். பாலசுந்தரம், ஏ.ஐ.சி.சி.டி.யு மாநில பொதுச் செயலாளர் க. ஞானதேசிகன், மாநிலக் குழு உறுப்பினர் பெ. மோகன், டி.டி.யு.சி பொதுச் செயலாளர் ஏ. சேக்கிழார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டில் சிஐடியு நிர்வாகிகள், உறுப்பினர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த CITU மாநில தலைவர் சவுந்தரராஜன், இந்த மாநாட்டில் தமிழகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டங்கள் நடைபெற்ற போராட்டங்கள் போன்ற அனைத்து விஷயங்களையும் பரிசீலிக்கிறோம் என்றார். உலகளவில் பின்தங்கிய ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஏற்பட்டு வரும் தொழிலாளர் பிரச்சனை, வேலையின்மை, வறுமை ஆகிய அனைத்து விஷயங்களிலும் தொழிலாளி வர்கம் தலையிட வேண்டும் என்ற முடிவை மீண்டும் இந்த மாநாட்டில் வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு உலகமயம் என்கின்ற கொள்கையை கைவிட்டு விட்டார் ஆனால் ஒரு காலத்தில் வக்காலத்து வாங்கியது அவர்கள் தான் என விமர்சித்தார். இந்த உலகமயம் என்பதை கடைப்பிடித்து பல்வேறு நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளுக்கு கடும் போட்டியாக இருப்பதாக கூறினார். தற்பொழுது டிரம்ப் ஒரு நிழல் யுத்தத்தை துவக்கி பல்வேறு நாடுகளுக்கு நெருக்கடிகளை தருவதாக தெரிவித்தார். மேலும் அனைத்து தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்களை நிரந்தரமற்றவர்கள் ஆக்க வேண்டும் தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு இருக்கக் கூடாது தொழிற்சங்கங்கள் இருக்கக் கூடாது என்பதுதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரிக்கையாக இருப்பதாகவும், அதனை நிறைவேற்றுவதற்கான நாடுகளிலும் அனைத்து அரசுகளும் முயற்சிப்பதாக தெரிவித்தார். இந்தியாவிலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கடுமையாக அதற்கு முயற்சிக்கிறது என தெரிவித்தார்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கொண்டு வந்துள்ள சட்ட தொகுப்பு இந்தியாவில் இருக்கக்கூடிய உற்பத்தி தொழிற்சாலையில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகளை எந்த சட்டமும் பொருந்தாதவர்கள் என்ற ஆக்குவதற்காக எண்ணுவதாகவும் கூறினார். இது போன்ற ஒரு செயலை வெள்ளைக்காரர்கள் கூட செய்தது கிடையாது என்று தெரிவித்தார். மேலும் இதற்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் அழுத்தம் தான் காரணம் எனவும் குறிப்பிட்டார். எனவே தற்பொழுது பாஜக கொண்டு வந்துள்ள சிரம் சக்தி நீதி என்பது மிக மோசமான தொழிலாளர்கள் கொள்கை என தெரிவித்தார். இது அவரவர் குல தொழிலை செய்ய வேண்டும் என்பதற்காக கொண்டு வருவதாக தெரிவித்த அவர் ஜனநாயகத்தை அவர்கள் கடைப்பிடிப்பது கிடையாது எனக் கூறினார்.

மேலும் இந்திய தொழிலாளர்கள் மாநாடு மோடி வந்ததன் பிறகு நடைபெறவில்லை என்றும் எவ்வளவு வலியுறுத்தினாலும் அந்த மாநாட்டை நடத்துவதற்கு அவர்கள் மறுப்பதாக தெரிவித்தார். மேலும் தற்பொழுது கோடிக்கணக்கான படித்த இளைஞர்கள் எந்த ஒரு பணி பாதுகாப்பும் இல்லாமல் வேலை வாங்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் இது குறித்து போராட்டம் நடத்துவதற்கு மாநாட்டில் தீர்மானிக்க உள்ளதாக தெரிவித்தார்.

தீவிரவாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து பேசிய அவர், அதை கைவிடப்பட வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பதாகவும் அதை எதிர்த்து செயல்பட்டுக் கொண்டிருக்க கூடிய அரசியல் கட்சிகள் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து வலுவாக போராடுவது என்று தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும் என தெரிவித்தார்.

டாடா நிறுவன பெண் ஊழியர்கள் போராட்டம் குறித்தான கேள்விக்கு, ஃபாக்ஸ்கான் போராட்டம், திருமகள் மாங்கல்ய திட்டம் பற்றி குறிப்பிட்டு அதில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டதை தெரிவித்த அவர் அது போன்ற தான் இந்த போராட்டத்தையும் பார்க்க வேண்டும் என்றும் இது கொடுமையானது என்றும் தெரிவித்தார். மேலும் அரசுதான் இந்த பிரச்சனையில் தலையிட்டு ஒழுங்குபடுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது ஒரு விதமான வன்கொடுமை என்றும் இது போன்றவை செங்கல் சூளைகள் உள்ளிட்ட இடங்களில் நடந்ததை பார்த்துள்ளோம் ஆனால் தற்பொழுது பெரிய நிறுவனங்களில் நடப்பது என்பது கொடுமை என்று தெரிவித்தார். இதனை எதிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்களில் இலட்சக்கணக்கான பெண்களும் இளைஞர்களும் 12 மணி நேரம் வேலை வாங்கப்படுவதாகவும் அவர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் கம்யூனிச சித்தாந்தம் உள்ள வேட்பாளர் மம்தானி வெற்றி பெற்றது குறித்தான கேள்விக்கு, இது அமெரிக்காவில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதற்கான அறிவிப்பாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு அங்கு குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் எனக் கூறினார், மீண்டும் அவர்கள் இங்கு குடியேறுவதற்கு 88 லட்சம் ரூபாய் தந்தால் தான் அனுமதி வழங்கப்படும் என்று கூறினார் என்பதையெல்லாம் சுட்டிக்காட்டிய அவர், அந்த நடவடிக்கையில் மக்கள் கோபத்தில் இருப்பதாக தெரிவித்தார். கம்யூனிஸ்ட் என்றாலே காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் ரத்தத்தை குடிப்பவர்கள் என்றுதான் அவர்கள் நினைத்து கம்யூனிஸ எதிர்ப்பு பிரச்சாரத்தை நடத்தி வருவதாகவும் ஆனால் அதெல்லாம் தங்களுக்கு கை கொடுக்கவில்லை என்பதை தான் இந்த வெற்றி சுட்டிக்காட்டுவதாக தெரிவித்தார். இது குடியரசு கட்சி தோல்வி அடையும் என்பதற்கான அறிகுறி என்றும் தெரிவித்தார். இது அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த விட்டாலும் சிறிய சிறிய மாற்றங்களை கொண்டு வரும் எனக் கூறினார்.

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் பிரச்சனை ஒருபுறமும் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று கோரிக்கை ஒருபுறமும் எழுந்து இருப்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், இது தொழில் பிரச்சனை என்று மட்டும் பார்க்க முடியாது என்றும் இது சமூக பிரச்சனையோடு கலந்த ஒன்று என்று தெரிவித்தார். டாஸ்மாக்கை மூடினால் அங்குள்ள பணியாளர்களுக்கு அரசு மாற்று வேலை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மதுபான கடைகளை மூடுவோம் என்று ஜெயலலிதாவும் அறிவித்தார் இந்த ஆட்சியும் அறிவித்தது என்று தெரிவித்தவர் ஆனால் மதுபான கடைகளை மூடுவது போல் ஆடுகிறார்கள் ஆனால் முழுமையாக மூடவில்லை எனவே விமர்சித்தார்.

மக்களின் பாதுகாப்பை சீரழிக்க கூடிய பிரச்சினைகள் என்று வரும் பொழுது மதுபான கடைகளை மூட வேண்டும் இது ஒரு சமூகப் பிரச்சனை என்பதால் விரிவாக விசாரித்த முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் மதுபான கடைகளை அரசு மூடும்போது மதுவிற்கு அடிமையாகி உள்ளவர்களை மீட்கும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது என சுட்டிக்காட்டினார். குடி குடியை கெடுக்கும் என்று எழுதி வைத்தால் மட்டும் போதாது என தெரிவித்த அவர் இது குறித்து பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மதுபான கடைகளை மூடினால் மட்டும் தீர்வு கிடைக்காது என்றும் மதுபான கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் அல்லது வேறு வகைகளில் குடிப்பது போன்ற விஷயங்கள் அரங்கேறும் உயிர்பலி ஏற்படும் என குறிப்பிட்டார். குஜராத்தில் எங்கும் மது கடைகள் இல்லை என தெரிவித்தவர் ஆனால் பல்வேறு வழிகளில் அங்கு கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் வானம் வேண்டுமானாலும் குஜராத்தில் கிடைக்கும் என தெரிவித்தார்.

மேலும் நாங்கள் தேர்தல் வரும் காலத்தில் மட்டும் தொழிலாளர்கள் நலனுக்காக போராடுபவர்கள் அல்ல என்றும் தொடர்ந்து எங்களது தொழிலாளர் நலன் போராட்டங்களை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

Recent News

கோவை அருகே நடத்தப்பட்ட சோதனையில் கட்டு கட்டாக சிக்கிய பணம்…

கோவை: கோவை இருந்து கேரளா உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 25.50 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக - கேரளா எல்லையான வேலந்தாவளம் சோதனை சாவடி காவல் துறையின் சோதனை...

Video

தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை- அலறி அடித்து ஓடிய மக்கள்- சிசிடிவி காட்சிகள்

கோவை: கோவை தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானையை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம்,...
Join WhatsApp