கோவையில் குடியால் கெட்டது குடும்பம்!

கோவை: கோவை அருகே குடிப்பழக்கத்தை தட்டி கேட்ட தந்தையை தாக்கிய மகன், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மகன் உயிரிழந்த நிலையில் கொலை வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே மது போதையில் வீட்டில் ரகளை செய்த மகனை தந்தை தாக்கியதில் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள பாரதி காலனியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (55). இவர் டிரைவர் வேலை செய்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் குமார் (28), ஆட்டோ ஓட்டி வருகிறார். விக்னேஷ் குமார் அதிக குடிப்பழக்கம் உள்ளவர் என தெரிகிறது.

இந்நிலையில் நேற்றிரவு விக்னேஷ் குமார் குடித்துவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது தந்தை செல்லத்துரை தட்டி கேட்டு உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ்குமார் தந்தை செல்லத்துரையிடம் அறைக்கதவை பூட்டி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இருவருக்கும் நடந்த சண்டையில் விக்னேஷ் குமாருக்கு கண், உதடு, முகத்தாடை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். மயங்கி கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விக்னேஷ் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கீழே தள்ளி விட்டதில் விக்னேஷ் குமார் இறந்ததால் அவரது தந்தை செல்லத்துரை மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recent News

நண்பர்களான முதல் நாளிலேயே கொடூரம்- முழு மதுபானத்தையும் குடித்ததால் ஆத்திரம்- கோவையில் நடந்த சம்பவம்…

கோவை: நண்பர்களான முதல் நாளே கொலை நண்பனை கொலை செய்த நண்பன், முழு மதுபானத்தையும் குடித்தத்தால் ஆத்திரத்தில் செய்ததாக தெரிவித்துள்ளார். கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் அருகே உள்ள...

Video

Join WhatsApp