கோவை: மேட்டுப்பாளையம் வனக்கல்லூரிக்குள் புகுந்த பாகுபலி காட்டுயானையை வனத்துறையினர் விரட்டிய போது யானை வனத்துறை வாகனத்தை தாக்கும் அதிர்ச்சி தரும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு வெளியேறிய பாகுபலி என்ற காட்டு யானை மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் உள்ள வனக்கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த
மேட்டுப்பாளையம் வனத்துறையினர் இரண்டு வனத்துறை ரோந்து வாகனங்கள் மூலம் பாகுபலி யானையை விரட்டும் முயற்சியை மேற்கொண்டனர்.
அப்போது வனத்துறை வாகனத்தை பாகுபலி காட்டுயானை தந்தத்தால் தாக்கியது. தொடர்ந்து வனத்துறையினர் ஹாரன் சத்தம் எழுப்பிய படி விரட்டியுள்ளனர். மீண்டும் யானை வனத்துறை வாகனத்தை தாக்க முயன்ற நிலையில் வனத்துறையினர் நூலிழையில் தப்பினர். பின்னர் யானை வனக்கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளது.
தற்போது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த காட்டுயானை தற்போது வரை யாரையும் தாக்கியது இல்லை என்றும் ஆனால் அடிக்கடி ஊருக்குல் வருவதால் அச்சம் நிலவுவதாகவும் எனவே அந்த யானையை பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

