கோவையில் குடியிருந்த வீட்டு உரிமையாளருக்கு விபூதி அடித்த நபர்! கேமிராவில் சிக்கினார்!

கோவை: கோவையில் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் வீட்டிற்குள் புகுந்த நபர் 8 பவுன் நகையை திருடிவிட்டு சிக்கினார்.

போத்தனூர் சீனிவாசா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் வேலுசாமி மனைவி மரகதம்(56). இவரது வீட்டின் முதல் மாடியில் கடந்த 4 ஆண்டுகளாக தேனி கம்பத்தை சேர்ந்த அழகுராஜா(38) குடியிருந்து வருகிறார்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்நிலையில், கீழ் தளத்தில் உள்ள மரகதம் வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க நகை காணாமல் போனது.

அந்த வகையில் 8 பவுன் நகை திருடு போயுள்ளது. அழகுராஜாவையும் காணவில்லை. இதனால் சந்தேகமடைந்த மரகதம் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.

அப்போது மேல் தளத்தில் குடியிருந்து வரும் அழகுராஜா, மரகதம் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டில் புகுந்து நகை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இது குறித்து மரகதம் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அழகுராஜாவை தேடி வருகின்றனர்.

Recent News

கோவையில் இராணுவ தளவாட உற்பத்தி கண்காட்சி இரு தினங்கள் நடைபெறுகிறது…

கோவை: ராணுவ தளவாட உற்பத்தி துறை சார்ந்த கான்கிளேவ் கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 13 ம்தேதி மற்றும் 14ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெறுகின்றது. கோவை அண்ணா சிலை அருகே உள்ள...

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp