கோவையில் இராணுவ தளவாட உற்பத்தி கண்காட்சி இரு தினங்கள் நடைபெறுகிறது…

கோவை: ராணுவ தளவாட உற்பத்தி துறை சார்ந்த கான்கிளேவ் கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 13 ம்தேதி மற்றும் 14ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெறுகின்றது.

கோவை அண்ணா சிலை அருகே உள்ள கொடிசியா தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது, கொடிசியா இராணுவ புத்தாக்கம், மற்றும் அடல் இன்குபேஷன் சென்டர் நடத்தும் பாதுகாப்பு துறை உற்பத்தி சார்ந்த திட்டங்கள், ஸ்ரீஜன் போர்ட்டல், இரானுவத்திற்க்கு தேவையான தளவாட உற்பத்தி செய்வதற்கான பதிவு, அதற்கு தேவையான தரம் சார்ந்த இரண்டு நாள் கான்கிளேவ் நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது.

இந்திய இரானுவ தளவாட உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் தங்களது பங்களிப்பு மற்றும் நேரடி துறை சார்ந்த தொடர்பு கொண்டு வளர்ச்சி பெறுவதை நோக்கமாக கொண்டு இந்த கான்கிளேவ் நடைபெற உள்ளது என தெரிவித்தார். மேலும் இத்தகைய கான்கிளேவ் நடத்துவதன் நோக்கம் இந்திய அரசின் பாதுகாப்பு துறை ஆதரவுடன், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் இரானுவ உற்பத்தியை மேம்படுத்துவது, சுயசார்பு தன்மை, உற்பத்தி பொருட்களை வாங்குவது, பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்வது, அது குறித்த சந்தேகங்கள் குறித்து விவாதிப்பது என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றார்.

இராணுவத்திற்க்கு தேவையான உற்பத்தியை உள்நாட்டில் தயாரிக்கும் நடைமுறைகள், இதனால் சிறு குறு நிறுவனங்கள் பெறும் வேலைவாய்ப்புகள், புதிய புதிய, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்வது, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக கூறினார். மேலும் ஜெம் போர்டல் பிரதிநிதி ஒருவர், அரசு இரானுவ தளவாடங்களை வாங்குவதில் கடை பிடிக்கும் நடைமுறைகள், அதனை உற்பத்தி செய்து வழங்குவதில் உள்ள அனுகூலங்கள், அரசின் வெளிப்படை தன்மை மற்றும் தேவை படும் திறன் குறித்து சிறப்புரையாற்ற உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது கொடிசியா செயலாளர் யுவ்ராஜ், சி.டி.ஐ.ஐ.சி அமைப்பின் இயக்குநர் பொண்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp