கோவை சித்தாப்புதூரில் உதவச் சென்ற முதியவரிடம் கைவரிசை!

கோவை:கோவையில் உதவ சென்ற முதியவரின் ஸ்கூட்டர் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணபதிப்புதூர் 3வது வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து (63). இவர் கடந்த 5ம் தேதி காலை தனது ஸ்கூட்டரில் சித்தாபுதூர் அய்யப்பன் கோயில் பகுதிக்கு சென்று நின்றிருந்தார்.

அப்போது அங்கு ஒருவர் கடையின் ஷட்டரை திறக்க மாரிமுத்துவை உதவிக்கு அழைத்தார். அவரும் அருகில் என்பதால் ஸ்கூட்டரில் இருந்து சாவியை எடுக்காமல் சென்றார்.

ஷட்டரை திருந்து விட்டு 10 நிமிடத்தில் திரும்பிய போது அவரது ஸ்கூட்டரைக் காணவில்லை. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தார்.

ஆனால் ஸ்கூட்டர் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து மாரிமுத்து காட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்கூட்டரை திருடிச் சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

Recent News

Video

Join WhatsApp