இயக்க மாட்டோம்: கோவையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் திட்டவட்டம்!

கோவை: தீர்வு எட்டும்வரை தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் ஓடாது என்று கோவையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் நம்மிடம் கூறியதாவது:-

கடந்த 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த திட்டத்தின்படி இந்தியா முழுவதும் ஆம்னி பேருந்துகளை இயக்க ஒன் இண்டியா திட்டத்தில் வரி செலுத்தினோம். ஆனால், அதன் பிறகும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் ஆம்னி பஸ்களுக்கு தமிழக அரசு தனியாக வரி விதித்தது.

ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்ய தொடங்கியதால் தற்பொழுது கேரளா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் தமிழக ஆம்னி பஸ்களுக்கு அந்த மாநில அரசு தனியாக வரி விதித்து ஆம்னி பேருந்துகளை சிறை பிடித்து வருகிறது.

இதனால் தொழில் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் கடந்த நான்கு நாட்களாக தமிழக ஆம்னி பஸ்களை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளோம். இதனால் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசிற்க்கும் இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக துறை சார்ந்த அமைச்சரை சந்தித்து பேசிய பிறகும் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கு நல்ல தீர்வு எட்டும்வரை தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் இயங்காது.

இவ்வாறு அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

Recent News

ஆர்கானிக் பொருட்கள் இயற்கை விவசாயப் பொருட்கள் அல்ல… மக்களே விழித்துக்கொள்ளுங்கள் – பி.ஆர்.பாண்டியன்!

கோவை: தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் வரும் நவம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார் என்று அமைப்பின்...

Video

Join WhatsApp