கோவை: பிரதமர் நரேந்திர மோடி, நவ வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள கோவை வர உள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பல்வேறு அரசியல் கட்சியினரும் வேகமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்டதிலிருந்து, பாஜகவும் தமிழக அரசியல் களத்தில் தன்னை வலுப்படுத்த முயன்று வருகிறது.
இந்த சூழலில், பிரதமர் மோடி கோவை வர உள்ளதாக விவசாயிகள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 19ம் தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெறும் வேளாண் கூட்டமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள வருகிறார் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட வேளாண் விஞ்ஞானிகளும், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், பிரதமர் அலுவலகம் இன்னும் இந்த தகவலை உறுதி செய்யவில்லை.
மோடி, கோவை, வேளாண் மாநாடு, Modi, Coimbatore, agriculture conference, Codissia, farmers

