கோவை: தவெக வாக்காளர்களுக்கு வாக்குரிமை கிடைக்காமல் தடுக்க படுவதாக அதன் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை தெற்கு வட்டாச்சியர்
அலுவலகம் முன்பு
SIR யில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் அதனை கண்டித்தும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ,
300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு பேட்டியளித்த அருண்ராஜ்
மாநில அளவில்
எஸ் ஐ ஆர் குளறுபடிக்கு எதிரான போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். எஸ் ஐ ஆர் என்பது கண்டிப்பாக அவசியம், ஆனால் தேர்தல் நேரத்தில் ஏன் அவசரமாக செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் 6.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர்,
BLO, எப்படி ஒரு மாதத்தில் மூன்று முறை நேரில் சென்று அவர்கள் பகுதியை பார்க்க முடியும்?
அரசுப்பணி வேலையை பார்த்துவிட்டு இதையும் எப்படி பார்க்க முடியும் என்றார்.
எங்கள் ஆதரவாளர்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வாக்காளர் படிவங்கள் கொடுக்கப்படவில்லை என தெரிவித்தார். இந்த வாக்காளர் பட்டியலை வைத்துத்தான் கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது.
பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டு, பின்னர் சிலரை சேர்த்திருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பு பல திட்டங்கள் அறிவித்தார்கள், குறிப்பாக அங்கு பெண்கள் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.
பிஎல்ஓ செல்லும் போது தவெக கட்சிக்காரர்கள் சென்றால் அனுமதிப்பது இல்லை என்றும் எங்கள் கட்சியை சார்ந்தவர்களுக்கு படிவங்கள் கொடுப்பதில்லை பல இடங்களில் வாக்காளர்களுக்கு வாக்குரிமை கிடைக்காமல் தடுக்கப்படுவதாக தெரிவித்தார்.


