கவுண்டம்பாளையத்தில் அடுத்தடுத்து கொள்ளை; பொதுமக்கள் பீதி

கோவை: கவுண்டம்பாளையத்தில் உள்ள வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கவுண்டம்பாளையம் அருகே உள்ள கிரி நகர், பாலாஜி கார்டன் 1வது தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25).

Advertisement

இவர் கடந்த 15ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரிக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.

இந்த நிலையில் வீடு பூட்டப்பட்டு இருப்பதை பார்த்த மர்ம நபர், பூட்டை உடைத்து வீட்டிற்குள் இருந்த சில்வர் பொருட்கள் மற்றும் பணம் 20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிவிட்டான் 

அதேபோன்று, கவுண்டம்பாளையம் ராஜன் நகர் 1வது தெருவில், ஸ்டான்லி (வயது 48) என்பவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்று இருந்தார்.

அப்போது அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் 20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பினர்.


 
ஊரிலிருந்து திரும்பிய இருவரும் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 
இதுகுறித்து சிக்கிய கைரேகைகள் மூலம் போலீசார் துப்பு துலுக்கி வருகிறார்கள்.

Recent News

Video

Join WhatsApp