சேலத்தில் மாயமான கல்லூரி மாணவி; கோவையில் மீட்டது “பிங்க் படை”

கோவை: பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு சேலத்தில் இருந்து கோவை வந்த கல்லூரி மாணவியை பிங்க் ரோந்து வாகனத்தில் சென்ற பெண் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கடந்த 15ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக பிங்க் நிற ரோந்து வாகனத்தை தொடங்கி வைத்தார்.

Advertisement

பிங்க் நிற காரில் ஒரு எஸ்எஸ்ஐ, மற்றும் பெண் போலீஸ் இரவு முழுவதும் நகரின் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ரோந்து சென்று பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு கோவை காட்டூர் இன்ஸ்பெக்டர் சரவணன் உத்தரவுபடி, சப் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் பிங்க் நிற பேட்ரோல் காரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவில் காந்திபுரம் பஸ் நிலையம் அருகே 19 வயது இளம்பெண் ஒருவர் தனியாக எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருந்தார். அவரைப் பார்த்த சப் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் அவரிடம் விசாரித்தனர்.

அப்போது அந்த மாணவி சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 19 வயது மாணவி என்பது தெரியவந்தது. விசாரணையில் வீட்டில் செல்போன் அதிகம் நேரம் பயன்படுத்தி கொண்டிருந்ததால் பெற்றோர் அவரை திட்டியதால் நேற்று கோபித்துக் கொண்டு சேலத்தை இருந்து பஸ்சில் புறப்பட்டு கோவை வந்ததாகவும், பணம் இல்லாததால் எங்கு செல்வது என்று தெரியாமல் நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து போலீசார் கல்லூரி மாணவிக்கு அறிவுரை கூறிய போலீசார் அவரை மீட்டு கவுண்டம்பாளையத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் இரவில் பாதுகாப்பாக தங்க வைத்தனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கோவை புறப்பட்டு வந்த பெற்றோரிடம் மாணவி ஒப்படைக்கப்பட்டார். மாணவி மாயமான 24 மணி நேரத்தில் போலீசார் மீட்டு ஒப்படைத்தது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Recent News

கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவம் சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் உயிரிழப்பு…

கோவை: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவத்தில் சுட்டு பிடிக்கப்பட்ட மூவரில் ஒருவர் உயிரிழந்தார். கோவையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த நிலையில்...

Video

Join WhatsApp