எழுதி வைத்து கொள்ளுங்கள்- 2026 தேர்தலில் இது தான் நடக்கும்- கோவையில் எல்.முருகன் பேட்டி…

கோவை: 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் அமையும் என எல் முருகன் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் செல்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை பிரதமர் நரேந்திர மோடி கோவை வர உள்ளார். பீகாரில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த பிறகு பிரதமர் தமிழகம் வருவது இதுவே முதல் முறை என்றார்.

பிரதமர் பதவி ஏற்ற பிறகு விவசாயிகளுக்காக பல திட்டங்களை அறிவித்து வருவதாகவும், குறிப்பாக சன்மான திட்டம் போன்ற திட்டங்கள் வழியாக விவசாயிகள் தொடர்ந்து பலனடைந்து வருகிறார்கள் என்று கூறினார். விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பிரதமர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார் என்று தெரிவித்தார்.

உலகம் முழுவதும் தலைசிறந்த தலைவராக பிரதமர் மோடி மதிக்கப்படுகிறார் என்றும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறார் என்றார்.

பீகாரில் ‘SIR’ திட்டம் மக்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாகவும், போலி வாக்காளர்களை அகற்றுவதற்கும் தேர்தல் முறையைச் சீர்செய்யவும் அந்த திட்டம் முக்கிய பங்காற்றுகிறது என்று கூறினார். தற்போது நாடு முழுவதும் 12 மாநிலங்களில் அந்த திட்டம் நடைமுறையில் இருப்பதாக தெரிவித்தார்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் வரவிருக்கும் 2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சி அமைக்கும் என கூறினார்.

Recent News

Video

Join WhatsApp