கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு- கைதானவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கோவை: கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு டிசம்பர் மூன்றாம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த 2 ஆம் தேதி தனியார் கல்லூரி மாணவி ஒருவர் அவரது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று பேர் அவர்களை தாக்கி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி , கார்த்தி (எ) காளீஸ்வரன் மற்றும் மதுரையை சேர்ந்த குணா (எ) தவசி ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.

மூவர் கோவை அரசு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிபதி முன்பு வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட 3 பேருக்கும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் அடையாள அணிவகுப்பையும் காவல்துறையினர் முடித்துள்ளனர் என்பதும் ஒரு மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News

கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவம் சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் உயிரிழப்பு…

கோவை: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவத்தில் சுட்டு பிடிக்கப்பட்ட மூவரில் ஒருவர் உயிரிழந்தார். கோவையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த நிலையில்...

Video

Join WhatsApp