கோவை டாக்ஸி ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய உதகை ஓட்டுநர்கள்- ஆட்சியரிடம் மனு…

கோவை: கோவை டாக்ஸி ஓட்டுநரை உதகை டாக்ஸி ஓட்டுநர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை டாக்ஸி ஓட்டுநர் உதகை டாக்ஸி ஓட்டுநர்களால் தாக்கப்பட்டதை கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வலியுறுத்தியும் சக டாக்சி ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.

Advertisement

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். கால் டாக்ஸி ஓட்டுனரான இவர் நேற்று முன்தினம் கோவையில் இருந்து உதகைக்கு வாடகைக்கு சென்று விட்டு திரும்பும் பொழுது உதகையில் இருந்த கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேறு மாவட்டங்களில் இருந்து உதகைக்கு வாடகைக்கு வரக்கூடாது என்றும் உதகையிலிருந்தும் வாடகை ஏற்றக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்பொழுது உதகை கால் டாக்ஸி ஓட்டுநர்கள் தங்கவேலை தாக்கியுள்ளனர். அதனால் தங்கவேல் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும் இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வலியுறுத்தியும் கோவையை சேர்ந்த சக கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Recent News

கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவம் சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் உயிரிழப்பு…

கோவை: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவத்தில் சுட்டு பிடிக்கப்பட்ட மூவரில் ஒருவர் உயிரிழந்தார். கோவையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த நிலையில்...

Video

Join WhatsApp