கோவை: கோவை மாவட்டத்தில் 12 காவல் உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தமிழகm முழுவதும் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியில் உள்ள 240 பேருக்கு பதவி உயர்வு வழங்கி பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்படி, மாநிலம் முழுவதும் 240 உதவி ஆய்வாளர்கள் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
கோவை மாவட்டத்தில் 12 பேர் உதவி ஆய்வாளராக இருந்து ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
அவர்களின் பெயர் பின்வருமாறு:-
விக்ரம், விவேக், திலக், செல்லமணி, கணேசமூர்த்தி, செந்தில்குமார், அப்சல் அகமது, அருள்பிரகாஷ், கருப்புசாமி பாண்டியன்,
மியாதித் மனோ, கோமதி, சக்திவேல் ஆகியோர் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றனர்.


