கோவையில் மன வேதனையுடன் பேட்டியளித்த செங்கோட்டையன்…

கோவையில் மன கோவை: கோவையில் மன வேதனையுடன் செங்கோட்டையன் பேட்டியளித்தார்.

சென்னை செல்வதற்காக கோபியில் இருந்து சாலை மார்கமாக கோவை விமான நிலையம் வந்தடைந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், 50 கால அரசியல் வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இயக்கத்திற்காக உழைத்த எனக்கு கொடுத்திருக்கக் கூடிய பரிசு உறுப்பினராக கூட இருக்கக் கூடாது என்ற முறையில் நீக்கப்பட்டு இருக்கிறேன் என்றார்.

இந்த மன வேதனை என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும்
இதற்கு மேல் எந்த கருத்தையும் சொல்லுவதற்கு இல்லை என தெரிவித்து சென்றார்.

தவெகவில் நீங்கள் இணைய போவதாக வெளியாகும் தகவல்கள் உண்மையா என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டார்.

Recent News

Video

Join WhatsApp